ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி- ஜெயலலிதா திறந்து வைத்தார்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

தஞ்சை: ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 177.92 ஏக்கர் பரப்பில் ரூ.100 கோடி மதிப்பில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று முதல் அங்கு முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கியது. இதில் 22 மாணவர்கள், 18 மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான விடுதிகள், ஆய்வுக்கூடங்கள், பிரதான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா இதனை திறந்து வைத்தார்.

அதேபோல தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் தொல்காப்பியர் சதுக்கம் அருகே ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

CM inaugurates Orathanadu veterinary medical college | ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி- ஜெயலலிதா திறந்து வைத்தார்!

TN chief minister Jayalalitha has inaugurated the Orathanadu veterinary medical college through video conference method.
Story first published: Wednesday, October 10, 2012, 10:26 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns