திருவனந்தபுரம் கே.எப்.சியில் புழுக்கள் நெளியும் சிக்கன்.. கடை மூடல்

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவனந்தபுரம் கே.எப்.சியில் புழுக்கள் நெளியும் சிக்கன்.. கடை மூடல்
திருவனந்தபுரம்: புழுக்கள் இருந்த சிக்கனை விற்பனை செய்ததாக எழுந்த புகாரை அடுத்து திருவனந்தபுரத்தில் கே.எப்.சி சிக்கன் விற்பனை கடையை மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 

வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஷாஜூ என்ற நபர் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் திருவனந்தபுரத்தில் உள்ள கே.எப்.சி கடைக்குச் சென்றார். அங்கு சென்று சாப்பிட்ட போது சில நிமிடங்களில் வாந்தி எடுத்தார். இதனையடுத்து அந்த சிக்கனை பரிசோதனை செய்தபோது அதில் இறந்து போன புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து உணவு மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் இருந்த சிக்கன் மற்றும் உணவுப் பொருட்களை சோதனை செய்த போது அவை 5 மாதங்களுக்கு முந்தையவை என்று தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திருவனந்தபுரம் மாவட்ட உணவுத்துறை அதிகாரி சிவகுமார். கே.எப்.சி சிக்கன் கடையில் விற்பனை செய்யப்படும் உணவு தரமில்லாதவையாக இருப்பதாக புகார் வந்ததை அடுத்து அந்த கடையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala: Worms found in fried chicken at KFC outlet in Thiruvananthapuram | திருவனந்தபுரம் கே.எப்.சியில் புழுக்கள் நெளியும் சிக்கன்.. கடை மூடல்

Thiruvananthapuram: Fast food chain Kentucky's Fried Chicken (KFC) has come under scrutiny in Kerala after a family reportedly found worms in their fried chicken. The incident was reported from an outlet in Thiruvananthapuram.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X