
இந்தியாவில் ரயில் பயணத்தின் போது, எலிகள், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி ஆகியவை பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. ரயில்வே பணியாளர்கள் எவ்வளவு தான் ரயி்ல் பெட்டிகளை சுத்தம் செய்தாலும், இவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால் ரயில்வே துறைக்கு, பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வருகிறது.
இந்த நிலையில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யுனியன் பொது செயலாளர் என்.கண்ணைய்யாவுக்கு, பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இது குறித்து புகார்களை அளித்துள்ளனர். எனவே ரயில்களில் உலா வரும் எலிகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்பயனாக ரயில் பெட்டிகளில் உள்ள பூச்சிகளை ஒழிக்க தற்போது சென்னையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகில் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் பராமரிக்கும் பணிமனை உள்ளது. இங்கு ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி உட்பட பலவிதமான பூச்சிகளை ஒழிக்கும் வகையில் பியுமிகேசன் சேம்பர் பார் பெஸ்ட் கண்ட்ரோல்' என்ற பெயரிலான நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
80 அடி நீளமும், 12 அடி அகலத்தில் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட எந்திரத்தில் 3 ரயில் பெட்டிகளை உள்ளே அனுப்பி, பெரிய தார்பாயால் ரயில் பெட்டிகள் மூடப்படுகிறது. அதன்பிறகு தார்பாய்க்கு உள்ளே மீத்தேல் புரோமடைஸ்' என்ற ஒரு வகை திரவ வடிவிலான கேஸ் செலுத்தப்படுகிறது.
கேஸ் வெளியே செல்லாத வகையில் கண்ணாடிகள் இறுக்கமாக மூடி விடுகின்றனர். 24 மணிநேரத்திற்குள் கேஸ் தாக்கி, ரயில் பெட்டிகளில் உள்ள பூச்சிகள், எலிகள் ஆகியவை செத்து விடுகின்றன.
அதன்பிறகு ரயில் பெட்டிகள், கண்ணாடி அறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, ரயில்வே பராமரிப்பு பணியாளர்கள், பாதுகாப்பு கவசங்களுடன் உள்ளே சென்று செத்து கிடக்கும் பூச்சிகளை அப்புறப்படுத்துகின்றனர். அதன்பிறகு மேலும் 24 மணிநேரம் கழித்து, பயணிகளின் பயன்பட்டிற்காக ரயில் பெட்டி அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த முறை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யுனியன் பொதுசெயலாளர் என்.கண்ணைய்யா தெரிவித்தார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications