அடுக்குமாடி குடியிருப்புகளில் தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

அடுக்குமாடிவாசிகளுக்கு தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 6 சிலிண்டர்களை மானிய விலையில் சமையல் கியாஸ் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

குழாய் மூலம் சமையல் கியாஸ் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தத்திற்கும் 6 சிலிண்டர் மட்டும்தான் சமையல் கியாஸ் வழங்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்கள் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 6 சிலிண்டர் மானிய விலையில் சமையல் கியாஸ் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

12 வீடுகள் கொண்ட குடியிருப்பில், 10 வீடுகளில் மட்டும் ஆட்கள் குடியிருந்தால் அந்த 10 வீடுகளுக்கு மட்டும் தலா 6 சிலிண்டர்கள் வீதம் ஆண்டுக்கு 60 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும். 6 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மானிய விலை சிலிண்டர் கிடையாது. வர்த்தக கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apartment residents to get 6 subsidised cylinders annually | அடுக்குமாடிவாசிகளுக்கு தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

In a major relief to residents of apartments with piped liquefied petroleum gas (LPG) supply, the government has relaxed the norms and decided that each occupied flat is entitled to an annual supply of six subsidised cooking gas cylinders.
Story first published: Sunday, October 14, 2012, 11:23 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns