
இது குறித்து சென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையாளர் அலுவலக மக்கள்தொடர்பு அதிகாரி கே.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ரீபண்டு தொகை வழங்குவதற்காக வங்கி கணக்கு எண் விவரம் கேட்டு, வருமான வரி செலுத்திய பலருக்கு [email protected] என்பது உள்ளிட்ட பல்வேறு இ-மெயில் முகவரிகள் மூலமாக இ-மெயில் வந்து கொண்டிருப்பது குறித்து வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை ரீபண்டு வழங்க வங்கி கணக்கு எண் விவரம் கேட்டு யாருக்கும் இ-மெயில் மூலம் தகவல் கேட்கவில்லை என்று வரி செலுத்துனர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற போலி இ-மெயில்கள் குறித்து கவனமாக செயல்படுமாறும், அது போன்ற இ-மெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.
ரீபண்டு தொடர்பான சந்தேகம் இருந்தாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ அது குறித்து சம்பந்தப்பட்ட வருமான வரி மதிப்பீட்டு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications