சிங்கப்பூர்: ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையின் சார்பான தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளையின் சார்பான தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி மாலை 4.30 முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. இடுகுவிஸ்ட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட், 1 சோபியா ரோடு, நம்பர் 7-13 பீஸ் சென்டர், சிங்கப்பூர்-228149 என்ற முகவரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் அதிநவீன விஞ்ஞான வளர்ச்சி கண்டு வரும் கம்ப்யூட்டர் யுகத்தில், சிங்கப்பூரில் மட்டுமின்றி உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் உருவாகி வரும் மாறுதல்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்களை குறித்தும், அவைகளை போட்டி திறன்மிக்க யுக்திகள் கொண்டு எவ்வாறு எதிர்கொள்ளலாம்? என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், 63981020 என்ற தொலைப்பேசி எண்ணிலும், Email: [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம். ஆனால் குறைந்த இருக்கைகளே மீதமுள்ளதால், முன்பதிவு அவசியம்.
இது குறித்து கூடுதல் விபரங்களை www.jmcalumni.org.sg என்ற இணையதளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications