கள்ள நோட்டை கண்டறிய வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து கேட்க கூடாது- ஆர்.பி.ஐ அறிவுரை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கள்ள நோட்டை கண்டறிய வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து கேட்க கூடாது- ஆர்.பி.ஐ அறிவுரை
நெல்லை: கள்ளநோட்டை கண்டறிவதற்காக வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தவிட்டுள்ளது.

 

கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில கடைகள், வணிக நிறுவனங்களுக்கு செலுத்தும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் எண்களை எழுதி கையெழுத்திடுமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்தினர். சிலர் பணத்தை வாங்க மறுத்தனர். இதனால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது ரிசர்வ் வங்கி ஆலோசனைக்கு சென்றதும் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பது குற்றம் என அறிவித்தனர்.

கள்ள நோட்டை புழக்கத்தை கண்டறிவதற்காக வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை நிறுத்துமாறு வங்கிகள், அரசு துறைகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறித்தியுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கையெழுத்து பெறும் நிலை இன்னும் நீடிக்கிறது.

இது குறித்து நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அவர் கடிதத்தில் குறிப்பிட்ட வங்கி, காப்பீ்ட்டு, மின்வாரிய அலுவலகங்களுக்கு ரிசர்வ் வங்கி பொது மேலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் எண்களை எழுதி வாங்கி கையெழுத்திடுமாறு உங்கள் வங்கி கிளையில் கூறுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்த உங்கள் அலுவலகத்தில் இருந்து குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என எங்களுக்கு தெரிவிக்கவும். இல்லாவிட்டால் உங்கள் கிளைகளுக்கு இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிடுங்கள். அதிக அளவில் பணம் பெறும் கிளைகளில் கள்ள நோட்டை கண்டறியும் புற ஊதா கதிர் விளக்குகளையோ வேறு அங்கீகரிக்கப்பட்ட எந்திரங்களையோ நிறுவுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI instructs banks not to seek signature from customers | கள்ள நோட்டை கண்டறிய வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து கேட்க கூடாது- ஆர்.பி.ஐ அறிவுரை

Reserve Bank of India has strictly advised the banks not to demand signature of customers to avoid fake currencies.
Story first published: Monday, October 22, 2012, 11:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X