
இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) ஆண்டுதோறும் வீரர்களின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கிறது. இதில் வீரர்களின் ஆடும் திறனை பொறுத்து 3 கிரேடுகளில் பிரிக்கப்படுகின்றனர். இதன் அடிப்படையில் வீரர்களுக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது. ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.50 லட்சமும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வெளியான 2012-13ம் ஆண்டிற்கான ஒப்பந்தத்தில் வீரர்களின் கிரேடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பார்மின்றி நீண்டகாலமாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அனுபவ சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தற்போது பி கிரேடு வீரராக மாறியுள்ளார். அவருக்கு பதிலாக இளம்வீரர் அஸ்வின், ஏ கிரேடு வீரராக உயர்த்தப்பட்டுள்ளார்.
2012-13ம் ஆண்டிற்கான புதிய வீரர்களின் ஒப்பந்தத்தில், ஏ கிரேடில் 9 வீரர்களும், பி கிரேடில் 8 வீரர்களும், சி கிரேடில் 20 வீரர்களும் என்று மொத்தம் 37 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஏ கிரேடு வீரர்கள்:
சச்சின், டோணி, ஜாகிர்கான், ஷேவாக், கம்பிர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, அஸ்வின்
பி கிரேடு வீரர்கள்:
ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரக்யன் ஓஜா, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, இர்பான் பதான், உமேஷ் யாதவ்
சி கிரேடு வீரர்கள்:
ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வினய் குமார், முனாப் பட்டேல், அபிமன்யூ மித்துன், முரளி விஜய், ஷிகார் தவான், விரிதிமன் சகா, பார்த்திவ் பட்டேல், மனோஜ் திவாரி, பத்ரிநாத், பியூஸ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், ராகுல் சர்மா, வருண் ஆரோன், அபினவ் முகுந்த், அசோக் டின்டா, யூசுப் பதான், பிரவீன் குமார், பாலாஜி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications