நிதிப் பற்றாக்குறை 6% என்பது நாட்டுக்கு நல்லதல்ல : ப.சிதம்பரம்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், கேல்கர் கமிட்டியின் நிதி மேம்பாட்டு பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அரசின் நிதிப் பற்றாக்குறை 6% என்பது நல்லதல்ல. இது வரும் 4 ஆண்டுகளில் 3% குறைக்கப்படும். மக்களுக்கு தரப்பட வேண்டிய மானிய தொகைகள் ஆதார் அடையாள அட்டை மூலமாக உரிய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
மேலும் நடப்பு நிதியாண்டில் பங்கு விற்பனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி நிதியை அரசு திரட்டும் என்றும் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications