ரிசர்வ் வங்கியின் 2வது காலாண்டு நிதிக் கொள்கை மறு ஆய்வுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் 0.25% குறைக்கப்படுகிறது என்றார்.
மேலும் ரிவர்ஸ் ரெப்போ எனப்படுகிற குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேபோல் STATUTORY LIQUITITY RATIO எனப்படுகிற வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் மாற்றம் செய்யப்படவில்லை.
ரொக்க கையிருப்பு விகிதக் குறைப்பால் வங்கிகளுக்கு ரூ17,500 கோடி கூடுதலாக கிடைக்கும். இதனால் வங்கிகள் கடன்களை குறிப்பாக வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றை வழங்குவது அதிகரிக்கும்.