வினாத்தாள் லீக் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று நடைபெறுகிறது

சென்னை: வினாத்தாள் லீக் ஆனதான் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று மீண்டும் நடைபெற்று வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு தணிக்கை அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்காக 3,687 காலி பணி இடங்கள் நிரப்பபப்டுகிறது.

வினாத்தாள் லீக்- தேர்வு ரத்து

இப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் அவுட் ஆனது அம்பலமானதால் 6 லட்சம் பேர் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மறுதேர்வு

இதனால் இன்று மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களுக்கு புதிதாக ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப் 2 மறுதேர்வு இன்று தமிழகம் முழுவதும் 114 மையங்களில் நடைபெறுகிறது. 3,456 தேர்வுக்கூடங்களில் 6 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

முறைகேடு நடக்கும் அபாயம் உள்ள 100 மையங்கள் அடையாளம் காணப்பட்டு ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+