ரூ20,925 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம்: 12 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
சென்னை: தமிழகத்தில் ரூ20,925 கோடி முதலீடு செய்யும் வகையிலான ஒப்பந்தத்தில் தமிழக அரசும் 12 நிறுவனங்களும் இன்று கையெழுத்திட்டிருக்கின்றன
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹூண்டாய் மோட்டார்ஸ், நோக்கியா, ஆம்வே, டிவிஎஸ் குரூப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 12 நிறுவனங்களின் மூலமாக ரூ.20,925 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது. மொத்தம் 36,855 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 1 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications