ஈரோடு: ஈரோட்டில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த 8 சாய பட்டறைகள் மூடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை அப்படியே வெளியேற்றாமல் பூஜ்ய நிலையை கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரால் காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆறு போன்ற நீர் நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காமல் கழிவு நீரை வெளியேற்றி வரும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியமும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முறையாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த 8 சாயத் தொழிற்சாலைகளை கடந்த இரண்டு மாதங்களில் அகற்றியுள்ளோம்.
மேலும், 27 சாயத் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்துள்ளோம். இது தவிர 5 தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications