ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமம் பெற ஒரே தவணையில் கட்டணம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்களை பெறுவதற்கான கட்டணத்தை ஒரே தவணையில் செலுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தற்போது சந்தையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களும் ஒரே தவணையில் கட்டணத்தை செலுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால் ரூ30,927 கோடி வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில் மொபைல் கட்டணங்கள் உயரவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications