
மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் சிரஞ்சீவி கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கு கடந்த 2011 ம் வருடத்தில் மட்டும் 6.31 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது அதற்கு முன்னர் இருந்ததை விட அதிகம்.
அதற்கு முந்தைய ஆண்டு 5.78 மில்லியன் வெளிநாட்டு பயணிகளும், 2009 ம் ஆண்டு 5.17 மில்லியன் பயணிகளும் இங்கே சுற்றுலா வந்துள்ளனர். 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், 2011ம் வருடம் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கும் வகையில் திட்டம் தீட்டப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள சிரஞ்சீவி, 2010ம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 64,889 கோடி ரூபாய் அந்நியச் செலவாணி கிடைத்துள்ளது. 2011ம் ஆண்டு 77,591 கோடி ரூபாயும், நடப்பாண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை 74,215 கோடி ரூபாய் சுற்றுலா பயணிகள் மூலம் அந்நியச் செலவாணி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications