சென்னை: இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மதுரைக்கும், துபாய்க்கும் இடையிலான புதிய விமான சேவையை டிசம்பர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது.

தென் தமிழகத்தின் முக்கிய நகரமாக மதுரை விளங்கி வரும் நிலையிலும் அங்கு விமான சேவை என்பது இன்று வரை பெரிய அளவில் இல்லாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மதுரை விமானம் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தப்பட்டு பல்வேறு விமான சேவைகளும் பெருகியுள்ளன.
தற்போது மதுரையிலிருந்து துபாய்க்கு புதிய விமான சேவை தொடங்கவுள்ளது. இந்த சேவையை இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. மத்திய அரசும், மதுரையிலிருந்து சர்வதேச விமான சேவையை தொடங்க அனுமதி அளித்தது.
இதையடுத்து டிசம்பர் 6ம் தேதி முதல் மதுரை - துபாய் இடையிலான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளது. வாரம் 3 முறை இந்த சேவை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications