
சங்கரன்கோவில், நாலாட்டின்புதூர், வில்லிசேரி, கழுகுமலை, கயத்தாறு, முடுக்கிமீட்டான்பட்டி, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவில்பட்டிக்கு மல்லிகை, சம்பங்கி, கேந்தி, ரோஜா, பிச்சி, அரளி, கனகாம்பரம் போன்ற பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது திருமண சீசன், கார்த்திகை தீபத் திருநாள் போன்றவற்றால் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப சாகுபடி இல்லாததால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.800க்கும், ரூ.50க்கு விற்ற கேந்தி பூ ரூ.80க்கும், ரூ.100க்கு விற்ற செவ்வந்தி பூ ரூ.120க்கும், ரூ.60க்கு விற்ற வெள்ளை செவ்வந்தி பூ ரூ.100க்கும் விற்கப்படுகிறது. மேலும் ரூ.100க்கு விற்ற அரளி ரூ.150க்கும், ரூ.80க்கு விற்ற சம்பங்கி ரூ.100க்கும், ரூ.300க்கு விற்ற கனகாம்பரம் ரூ.700க்கும், ரூ.60க்கு விற்ற ஊட்டி பைஸ்டார் ரோஜா ரூ.150க்கும், சாதா ரோஜா ரூ.50லிருந்து ரூ.60 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications