டாபே தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் விருது

Posted By:
Subscribe to GoodReturns Tamil

டாபே தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் விருது
டெல்லி: டாபே நிறுவன சேர்மனும், சிஇஓவுமான மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் விருது கிடைத்துள்ளது.

ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் ஃபோரம் வர்த்தகத்தில் சிறந்து விளங்கி அதே சமயம் குடும்பத்தையும் பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் பெண்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் விருது டாபே சேர்மனும், சிஇஓவுமான மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்த பிரமாண்ட விழாவில் மல்லிகா ஸ்ரீனிவாசனின் திறமையைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது.

அதன் பிறகு பேசிய மல்லிகா கூறுகையில்,

2012ம் ஆண்டுக்கான ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது ஆசிய பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. டாபே நிறுவனம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மாற்ற போராடுகிறது. அதிலும் குறிப்பாக உற்பத்தியை பெருக்க, விவசாய வருவாயை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. 5 தலைமுறைகளாக டாபே நிறுவனம் இந்தியா உள்பட உலகின் 77 நாட்டு விவசாய சமூகத்துடன் சேர்ந்து பணியாற்றுகிறது என்றார்.

பொருளாதார முன்னேற்றப் பாதையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் ஃபோரமை அவர் பாராட்டினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: award, விருது
English summary

TAFE Chairman & CEO Mallika Srinivasan gets Asian Business Leadership Award | டாபே தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் விருது

The Asian Business Leadership Forum felicitated Ms. Mallika Srinivasan, Chairman & CEO of India’s second and world’s third largest tractor maker TAFE, with the prestigious ABLF Woman of Power Award for her outstanding contribution to the industry. Ms. Srinivasan received the award at a glittering function at Abu Dhabi, UAE.
Story first published: Thursday, November 29, 2012, 13:24 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns