ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கான தடையில் தளர்வு: அமெரிக்கா அறிவிப்பு
நியூயார்க்: ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்திருக்கும் தடையில் சிறிது மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்த விவகாரங்களுக்கு முழுமையாக தீர்வு காணப்படும் வரை அமெரிக்கா அந்நாட்டுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும்.
இருப்பினும் சீனா, இந்தியா, உள்ளிட்ட 20 நாடுகள் ஈரானிலிருந்து அடுத்த 180 நாள்களுக்கு மட்டும் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானின் அணு ஆயுத விவகாரத்தால் உலக நாடுகளை அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா தனது தடையில் சற்று தளர்வு ஏற்படுத்தியிருப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு நிம்மதி தரக் கூடியது.


Click it and Unblock the Notifications