
ஏற்கனவே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை முடக்கி வைத்துள்ளது. மேலும் உரிய கட்டணம் செலுத்தாததால் இந்த நிறுவனத்திற்கு லீசுக்குக் பல விமானங்களை கொடுத்திருந்த நிறுவனங்கள் அதை எடுத்துச் சென்றுவிட்டன.
இந் நிலையில் வளைகுடாவைச் சேர்ந்த எதிகாட் நிறுவனத்திடம் பெரும்பாலான பங்குகளை விற்க அவர்களுடன் கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா பேச்சு நடத்திக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர அரசுக்கு ரூ. 63 கோடி சேவை வரியை மல்லையா பாக்கி வைத்துள்ளார். இதையடுத்து ஒரு கிங்பிஷர் விமானத்தை அந்த மாநில அரசு ஜப்தி செய்துவிட்டது.
இந்த விமானம் கூட கிங்பிஷருக்கு சொந்தமானதல்ல, இதுவும் இன்னொரு விமான நிறுவனத்திடம் லீசுக்கு எடுக்கப்பட்டதாகும்.
இதற்கிடையே மும்பை விமான நிலையத்துக்கும் மல்லையா ரூ. 22 கோடி பாக்கி வைத்துள்ளார். இதையடுத்து அந்த விமான நிலையத்திலிருந்து கிங்பிஷர் அலுவலகம், விமானங்கள், ஒர்க் ஷாப் ஆகியவற்றை வெளியேற்றப் போவதாக விமான நிலையமும் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications