
அண்மையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தின் போது டெல்லி, மும்பை, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மண்டலங்கள் விலைபோகவில்லை. இதற்குக் காரணம் மண்டலங்களில் ஏலம் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைத் தொகை அதிகமாக இருக்கிறது என்பதுதான்!
கடந்த ஏலத்தின்போது டெல்லி மண்டலத்திற்கு ரூ.693.06 கோடி, மும்பைக்கு ரூ.678.45 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.330.12 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.67.08 கோடி அடிப்படைவிலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மிகவும் அதிகம் என நிறுவனங்கள் கருதியதால் விலை போகவில்லை.
இதனால் அடிப்படை விலையில் 30% - ஐ குறைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்தது. இதனால் விடுபட்ட மண்டலங்களுக்கு 2-ம் கட்டமாக ஏலம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகர், இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு சுமார் ரூ20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். ஏற்கெனவே ஏலத்தில் கலந்து கொண்ட நிறுவனங்களே இந்த ஏலத்திலும் பங்கேற்கும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications