டெல்லி: வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதாவை நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து அகில இந்திய அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட 19 வங்கிகளின் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.ஆனால் இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குழும வங்கிகளின் ஊழியர்கள் பங்கேற்கவில்லை. எனவே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகள் இயங்கும். சில தனியார் வங்கிகளும் இயங்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான வங்கி பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏடிஎம் மையங்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications