
இங்கிலாந்திலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பட்டப் படிப்பை முடித்தார் ரத்தன் டாடா. பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மையில் பட்டம் பெற்றார். 75 வயதாகும் ரத்தன் டாடா தமது பொறுப்புகளை 44 வயதான சைரஸ் மிஸ்ட்ரியிடம் ஒப்படைக்கிறார். சைரஸ் மிஸ்ட்ரி கடந்த ஆண்டு டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்புக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
1991ம் ஆண்டு ஜேஆர்டி டாடாவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ரத்தன் டாடா ஏற்றார். தற்போது பொறுப்பேற்கும் மிஸ்ட்ரி, ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் குடும்ப உறுப்பினர். இவர்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18% பங்குகளை வைத்திருக்கின்றனர்.
2011-2012ஆம் ஆண்டு காலத்தில் ரூ4,75,000 கோடி வளர்ச்சியை எட்டியது டாடா குழுமம். முன்பு 1991ல் இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ.14 ஆயிரம் கோடி!
ரத்தன் டாடாவுக்கு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. புதிய பாதையில் பயணிக்கிறது டாடா குழுமம்!


Click it and Unblock the Notifications