ஹசிரியா : குஜராத் மாநிலம் ஹசிரியா துறைமுகம் அருகே 21 மணி நேரம் எரிந்த பெட்ரோல் கிடங்கு தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் பணிபுரிந்த இரு தொழிலாளர்கள் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
குஜராத்தின் சூரத் அருகே உள்ளது ஹசிரியா துறைமுகம். இதன் அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு இருக்கிறது. இங்குள்ள பிரம்மாண்ட டேங்குகளில் பெட்ரோல், டீசல் சேமித்து வைக்கப்படும்.
இதில் ஒரு கிடங்கில் நேற்று பிற்பகல் திடீரென தீ பிடித்த கடந்த 21 மணி நேரமாக எரிந்து கொண்டிருந்தது 150க்கும் மேற்பட்டோர் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 1 கோடி லிட்டர் பெட்ரோல் எரிந்து நாசமாகியிருக்கிறது.
மேலும் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. தற்போது இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இத்தீவிபத்தால் பல நூறு கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.


Click it and Unblock the Notifications