இன்போசிஸ் நிறுவன காலாண்டு லாபம் ரூ.2,369 கோடியாக அதிகரிப்பு; பங்குகள் விலை 'ஜிவ்'!
பெங்களூர்: இந்த நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு (அக்டோபர்-நவம்பர்-டிசம்பர்) லாபம் ரூ. 2,369 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 9,298 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு 12 சதவீதம் உயர்ந்து ரூ. 10,424 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தக் காலாண்டில் இன்போசிஸ் ரூ. 2,200 கோடிக்குள் தான் லாபம் ஈட்டும் என பங்குச் சந்தை ஆசாமிகள் கணித்திருந்த நிலையில், அதையெல்லாம் மீறி லாபம் ரூ. 2,369 கோடியாக அதிகரித்துள்ளது.
2012-13 நிதியாண்டில் மொத்த வருவாய் 7.45 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் நிலவி வரும் பொருளாதாரத் தேக்கத்துக்கு இடையிலும் இன்போசிஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சிபுலால் தெரிவித்துள்ளார்.
கடந்த பல காலாண்டுகளாக எதிர்பார்த்ததைவிட குறைவான வருவாயையும் லாபத்தையும் ஈட்டி வந்த இன்போசிஸ் இப்போது தான் முதல் முறையாக கணிப்புகளை பொய்யாக்கி அதிக லாபம் ஈட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் மிக மோசமான லாபத்தை ஈட்டி வந்தன. இன்று காலாண்டு முடிவுகள் வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு உடனடியாக 11 சதவீதம் உயர்ந்தது.
Share This Article
English summary
Infosys Q3 2013 beats estimates; PAT at Rs 2369 cr | இன்போசிஸ் நிறுவன காலாண்டு லாபம் ரூ.2,369 கோடியாக அதிகரிப்பு; பங்குகள் விலை 'ஜிவ்'!
IT major Infosys finally reported profits and revenues that beat estimates, with profit after tax at Rs 2369 crores for Q3 2013, against consensus estimates of around Rs 2,200 crores. Infosys revenue for Oct-Dec quarter was up 12 per cent at Rs 10,424 crore from Rs 9,298 crore in the year-ago period. The company has given a revenue guidance of $7.45 billion for FY 13, which again too is above street expectations. Rupee revenue guidance is also upped by the company.
Story first published: Friday, January 11, 2013, 10:37 [IST]
Other articles published on
Jan 11, 2013