'பணக்காரர்களுக்கு கூடுதல் வரியா?: ப.சிதம்பரம் கருத்து

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'பணக்காரர்களுக்கு கூடுதல் வரியா?: ப.சிதம்பரம் கருத்து
கோலாலம்பூர்: தற்போது விவாதிக்கப்பட்டு வரக் கூடிய மிகப் பெரும் பணக்காரர்களிடம் சற்று கூடுதலாக வரி கட்ட சொல்வது போன்ற வரி விதிப்பு மாற்றங்களையும் நாம் பரிசீலிக்கலாம் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

 

சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருவாயை அதிகரிப்பதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை 3% குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி இனங்களை விரிவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதனால் ஜிடிபியில் வரி வருவாயின் பங்கு அதிகரிக்கும். 2015-16-ல் 8% பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம். என்னைப் பொறுத்தவரையில் நிலையான வரி விகிதங்களே அவசியம் எனக் கருதுகிறேன். இருப்பினும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப அரசுக்கு தேவைப்படும் நிலையில் கூடுதல் வருவாய்க்காக இந்த வரி விகிதங்கள் மாற்றப்படலாம் என்பது என் கருத்து. தற்போது "விவாதிக்கப்பட்டு" வரக் கூடிய மிகப் பெரும் பணக்காரர்களிடம் சற்று கூடுதலாக வரி கட்ட சொல்வது போன்றவற்றையும் நாம் பரிசீலிக்கலாம் என்றார் சிதம்பரம்.

மேலும் தற்போதைய வரி விகிதங்கள் அனைத்தும் 1997-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 4 பிரதமர்கள், 4 நிதி அமைச்சர்கள் வந்து போய்விட்டனர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார் ப.சிதம்பரம். முன்னதாக ஹாங்காங் முதலீட்டாளர்களுடன் சிதம்பரம் செவ்வாய்க்கிழமையன்று உரையாடினார். அப்போது, நிதிப் பற்றாக்குறை 2013-14 நிதியாண்டில் இது 4.8% குறையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Argument for taxing "very rich" should be considered: FM | 'பணக்காரர்களுக்கு கூடுதல் வரியா?: ப.சிதம்பரம் கருத்து

Finance Minister P Chidambaram, who has talked about a stable tax regime during his meetings with foreign investors in the last two days, has said that the argument for taxing the very rich "a little more" should be considered. "I believe in stable tax rates. However, I must concede that there is an argument, underline the word argument, that when the economy requires, when the government requires more resources the very rich should willingly pay a little more.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X