
விமான சேவையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அபுதாபியின் எதிஹாட்ஸ் நிறுவனத்துடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் ரூ1800 கோடிக்கு ஜெட் ஏர்வேஸின் 24% பங்குகளை வாங்க எதிஹாட் நிறுவனம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி நார்த் ப்ளாக்கில் நிதி அமைச்சரது அலுவலகத்தில் ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயலு எதிஹாட் நிறுவனத்தின் தலிவர் ஜேம்ஸ் ஹோகனும் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் இருவரும் விரிவாக பேசவில்லை. நிதி அமைச்சருடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது என்று மட்டுமே கருத்து தெரிவித்தனர். இருவரும் நேற்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தனர்.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்கினால் இந்திய விமான சேவைத் துறையில் முதலாவது அன்னிய முதலீடாக இது இருக்கும்..


Click it and Unblock the Notifications