
கேரளாவில் ஒரு கிலோ கறி கோழி ரூ.105 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தேவை அதிகரிப்பால் கறிகோழி விலை ஏற்றம் செய்யப்பட்டு வருவதாக கோழி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தினசரி 100 லோடு கறி கோழிகள் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கின்றன. தினசரி 30 ஆயிரம் கிலோ கோழி இறைச்சிக்கும் மேல் தேவை உள்ள நிலையில் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. மொத்த வியாபாரிகள் விற்கும் விலையில் இருந்து கிலோவுக்கு ரூ.10 முதல் 15 ரூபாய் வரை அதிகமாக வைத்து சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
இறைச்சி கோழி விலை உயர்வை கட்டுபடுத்தும் வகையில் கேரளாவில் பிப் 7ம் தேதி முதல் ஹோட்டல்களில் கோழி இறைச்சி விற்பனை செய்யப் போவதில்லை என ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் பவர் டி கார்ப்பரேசன் வழியாக கேரள அரசு பிரய்லர் கோழிகளை அதிகம் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹோட்டல் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications