மும்பையில் யுனினார் சேவை நிறுத்தம்!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் யுனினார் நிறுவனத்தின் 22 தொலைத் தொடர்பு உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த நவம்பரில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்ற யுனினார் நிறுவனம், 6 வட்டங்களில் மொபைல் போன் சேவை வழங்குவதற்கான உரிமங்களைப் பெற்றது. எனினும், மும்பை வட்டத்திற்கான உரிமம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மும்பை வட்டத்தின் சேவைகளை யுனினார் நிறுவனம் நள்ளிரவு முதல் நிறுத்தியுள்ளது. எனினும், மகாராஷ்டிரா, கோவா, குஜராத் உள்ளிட்ட இதர தொலைத்தொடர்பு வட்டங்களில் யுனினார் நிறுவன மொபைல் போன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மும்பையில் தடையின்றி சேவை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக பிற மொபைல் சேவை நிறுவனங்களிடம் யுனினார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications