வீட்டு கடன் வாங்குவதால் என்னென்ன நன்மைகள்?

வீட்டு கடன் வாங்குவதால் என்னென்ன நன்மைகள்?
பெங்களூர்: வீட்டு கடன் வாங்குவதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்று பார்க்கலாம்.

நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவதுண்டு. இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டி முடிக்கவோ, வாங்கவோ பணத்தை கொட்டிக் கொடுக்க வேண்டி உள்ளது. ஆனால் இந்த நிலையிலும் நீங்கள் சொந்த வீட்டில் வசிக்க ஆசைப்படலாம். இருக்கவே இருக்கு வீட்டு கடன்.

வங்கிகளில் கடன் வாங்க வேண்டாம் என்று நிதி நிபுணர்கள் அறிவுரை வழங்கும்போது நீங்கள் என்னடா என்றால் வீட்டு கடன் வாங்கச் சொல்கிறீர்களே என்று நினைக்கலாம். வீட்டு கடன் வாங்கினால் முதலுக்கும், நீங்கள் கட்டும் வட்டிக்கும் வரி விலக்கு பெறலாம். கடனை சிறுகச் சிறுக அடைக்கலாம். வீட்டு கடன் வாங்குவதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்று தெரியுமா?

1. ஒரேயடியாக பெரிய தொகை கொடுப்பதை விட வீட்டு கடன் வாங்கினால் மாதாமாதம் ஒரு தொகையை கொடுத்தால் போதும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் கட்டும் தொகை வாடகைக்கு பதில் போன்றாகிவிடும்.

2. நீங்கள் கட்டும் வட்டிக்கு அதிகபட்சமாக ரூ.150,000 வரை வரி விலக்கு பெறலாம். வீட்டில் நீங்கள் குடியிருந்தால் மட்டுமே வரி விலக்கு பெற முடியும். இது தவிர கடனின் முதலில் ரூ. 1 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.

3. உங்கள் மனைவி வேலை பார்த்தால் நீங்கள் இருவரும் சேர்ந்து கூட்டாக வீட்டு கடன் வாங்கலாம். அவ்வாறு கடன் வாங்கினால் நீங்கள் இருவரும் தனித்தனியாக வரி விலக்கு பெறலாம்.

4. உங்களுக்கு அதிகமாக பணம் கிடைத்தால் கடன் தொகைக்கு கூடுதலாக பணம் செலுத்தலாம். அதனால் வட்டி சுமை குறையும்.

5. மாதாமாதம் கடன் தொகையை கட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே வீட்டு கடன் வாங்கவும். இல்லை என்றால் கடனை வாங்கி வீணாக அல்லல்பட வேண்டாம்.

Owning a home is everyone's dream. Home loans make our dream come true. There are some benefits in taking home loans. Do you know that?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+