இனி டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: ரயில்வே அமைச்சர் பன்சால்
மிர்சாபூர்: வருங்காலத்தில் டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள விந்தியாசல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவும் இல்லை. அதை உயர்த்தும் திட்டமும் இப்போதைக்கு இல்லை. பல்வேறு திட்டங்களுக்காக ரயில்வே அமைச்சகத்திற்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை வேறு வழியில் திரட்டுவோம். வருங்காலத்தில் டீசல் விலை உயர்ந்தாலும் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. மேலும் டீசல் விலை குறைந்தால் கட்டணத்தை குறைக்கவும் அரசு பரிசீலிக்கும் என்றார்.
Share This Article
English summary
Burden of hike in diesel prices won't be passed on people: Bansal | இனி டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: ரயில்வே அமைச்சர்
The burden of any future hike in diesel prices will not be passed on passengers and the government can even consider withdrawing the ticket surcharge if prices of the fuel come down, Union Railway Mnister P K Bansal has said.
Story first published: Monday, March 11, 2013, 11:41 [IST]
Other articles published on
Mar 11, 2013