
முதலீடு செய்வதற்கு முன் பொருளாதார நிலை, வர்த்தக நிலை மற்றும் நமது நிலை ஆகியவற்றை கணக்கிட்டுக் கொள்வது நமக்கு சேதாரத்தை ஏற்படாமலிருக்க செய்யும். எப்பொழுதுமே மாறிக் கொண்டிருக்கும் முதலீட்டு விஷயங்களை நாம் கவனமுடன் தேர்ந்தெடுத்தால் கைமேல் பலன் கிடைக்கும். இந்த ஆண்டு எந்தெந்த விஷயங்களில் முதலீடு செய்தால் நம்மைப் போன்ற சாமானியருக்கும் பலனுள்ளதாக இருக்கும் என்பதை பார்ப்போமா!!!
1) தங்கம் அல்லது வெள்ளி!
ரூபாயின் மதிப்பு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஆண்டில் தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைப்பது நல்லதாகும். குறைந்த கால முதலீடாக இல்லாமல், வெள்ளியின் மீது நீங்கள் முதலீடு செய்யலாம். தங்கத்தில் உங்களுடைய முதலீட்டை செய்வதாக இருந்தால் மொத்தமாகவே 5% முதல் 10% வரை மட்டும் அதனை செய்யவும்.
2) சொத்துக்கள்
பெருநகரங்கள் என்றழைக்கப்படும் மெட்ரோபாலிடன் நகரங்களில் சொத்து மதிப்புகளுக்கான வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களின் சொத்துக்களில் கவனம் செலுத்துவது நல்ல பலன் தரும்.
3) பங்குகள்
பங்குகளில் முதலீடு செய்வது சிக்கலானதாகவும் மற்றும் எளிதில் கணிக்க முடியததாகவும் இருக்கும். எனவே நீண்டநாள் முதலீடு செய்ய நினைப்பவர்கள் மட்டும் பங்குகளில் முதலீடு செய்யவும்.
4) பரஸ்பர கடன் நிதி
இந்த பரஸ்பர நிதித்திட்டங்கள் பேரத்திற்கு வாய்ப்புடைய சான்றிதழ் சேமிப்புகளிலும் (Negotiable Certifcate Deposits) மற்றும் பெருநிறுவன (Corporate Deposits) முதன்மையாக முதலீடு செய்யப்படுகின்றன. வட்டி விகிதங்கள் குறைந்து வரும் வேளைகளில், இதுதான் உங்களுக்கு ஏற்ற முதலீடாக இருக்கும்.
5) பெரிய பரஸ்பர நிதி திட்டங்கள்
பங்குச் சந்தைகளில் கீழ்நோக்கி செல்லும் நிலை மிகவும் குறைவான நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் ஸ்திரத்தன்மையை பெற்றுள்ள பெரிய முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது மற்றுமொரு சிறந்த முதலீட்டு திட்டமாகும்.
6) வங்கியிலேயே முதலீடுகளை வைத்திருங்கள்
வங்கிகளில் வழங்கப்படும் நிலையான வைப்புநிதித் திட்டங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு சிறந்த வருடாந்திர இலாபத்தை தருவதாக இருக்கும. வட்டி விகிதங்கள் உயரத்திற்கு சென்று கொண்டிருக்கும் இந்த வேளைகளில், நீங்கள் 9.25% வரை வட்டியாகவே பெற முடியும்.
என்ன சார்! உங்கள் பணத்தை முதலீடு செய்ய உடனே கிளம்பிட்டீங்களா?!!


Click it and Unblock the Notifications