
மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் பன்சால் 'தற்போதைய காலத்துக்கு ஏற்ப ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்த வேண்டியுள்ளது. அதே போல், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த சேவை அளிக்க ஏராளமாக நிதி தேவைப்படுகிறது. எனவே, ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களில் முதலீடு செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
ரூ. 2 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பெயர்கள் அந்த நிலையங்களுக்கு சூட்டப்படும்.ரயில் கட்டணங்கள் 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரித்து விட்டது. இதனால், குறைந்த அளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இதில் சாதாரண வகுப்பு பயணிகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை.ரயில் டிக்கெட்களுக்கு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படுகிறது.
ஏஜென்டுகள் இதை பயன்படுத்தி முதல் நாளே டிக்கெட்களை எடுத்து, மீதி 119 நாட்களிலும் விற்கிறார்கள். விற்க முடியாத டிக்கெட்டுகளை கடைசி நாளில் ரத்து செய்து விடுகிறார்கள். இதை தடுக்க முன்பதிவு, ரத்து கட்டணங்களை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் உண்மையிலேயே பயணம் செய்ய விரு ம்புபவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தவிர, மும்பை-காரைக்கால் உள்பட மேலும் 19 புதிய ரயில்கள் மற்றும் சேவை நீட்டிப் புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்' என தெரிவித்தார்.
வெளிநடப்பு:
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமே ரயில்வே பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி, அமைச்சர் பன்சால் பதிலுரையின் போது, அதிமுக, பாஜ, சிவசேனா, திரிணாமுல், பிஜேடி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications