1 பில்லியன் டாலர் சேமிக்க ஆயிரக் கணக்கானோரை வீட்டுக்கு அனுப்பும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி

Posted By:
Subscribe to GoodReturns Tamil

வாஷிங்டன்: ஐரோப்பாவின் மிகப் பெரிய வங்கியான ஹெச்.எஸ்.பி.சி. ஆயிரக்கணக்கானோரை பணி நீக்கம் செய்யவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சந்தை மதிப்பில் ஐரோப்பாவின் மிகப் பெரிய வங்கியான ஹெச்.எஸ்.பி.சி. 2013ம் ஆண்டில் 1 பில்லியன் டாலரை மிச்சப்படுத்த ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சுமார் 5,000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்று வங்கிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

5,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டால் வங்கிக்கு 1 பில்லியன் டாலர் மிச்சமாகுமாம். கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து 3.5 பில்லியன் டாலர் சேமித்து இலக்கை அடைந்துவிட்டதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி இந்த மாத துவக்கத்தில் தெரிவித்தது. இந்நிலையில் மேலும் பலரை வீட்டுக்கு அனுப்ப உள்ளது.

ஹாங்காங்கில் துவங்கப்பட்ட ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தற்போது ஆசியாவை முக்கிய சந்தையாகக் கருதுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: job cut
English summary

HSBC to cut thousands more jobs as 'part of $1 bn savings plan' | ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை விட்டு நீக்கும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி

According to a report, Europe's largest bank HSBC is planning to cut thousands of posts in order to save $1 billion.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns