கடன்களுக்கான வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி-இனி குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்
டெல்லி: வங்கிகளின் குறுகியக் காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
இதன்மூலம் வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட காலாண்டு நிதிக் கொள்கையில், வங்கிகளின் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் இதுவரை இருந்த 7.75% வட்டி விகிதம், இனி 7.5% ஆகக் குறையும்.
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், சந்தையில் பணப் புழகத்தை அதிகரிக்கவும், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கத்தைக் குறைக்கவும் இந்த வட்டிக் குறைப்பு அமலாக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications