நாட்டின் 60% மக்களுக்கு 3 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. 2 ரூபாய்க்கு கோதுமை!

உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவால் இந்தியாவில் உள்ள 3ல் 2 பங்கு மக்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை கிடைக்கும். கிராமப்புறங்களில் 75 சதவீத மக்களும், நகரப் புறங்களில் 50 சதவீதம் பேரும் இந்த மசோதாவால் பயன்பெறுவர்.
இந்த மசோதா இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார். மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி ரூ.3க்கும், ஒரு கிலோ கோதுமை ரூ.2க்கும் மற்றும் ஏனைய தானியங்கள் கிலோ ரூ.1க்கும் வினியோகம் செய்யப்படும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு 3 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விலை மாற்றம் செய்யப்படும். இந்த மசோதாவால் அரசுக்கு உணவு மானியமாக ரூ.20,000 கோடி கூடுதலாக செலவாகும்.


Click it and Unblock the Notifications