அடேங்கப்பா.. இந்தியாவில் செல் கனெக்ஷன் வைத்திருப்போர் எண்ணிக்கை 86.26 கோடியாம்

இது சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் ஆகிய இரண்டையும் சேர்த்ததாகும். ஜனவரி மாத நிலவரம் இது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 0.24 சதவீதம் குறைவுதான். மேலும் தொடர்ந்து 7வது மாதமாக செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் பல நிறுவனங்கள் புதிதாக ஏராளமான இணைப்புகளை வழங்கியிருந்தாலும், பல்வேறு இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் நிகர அடிப்படையில் சந்தாதாரர் எண்ணிக்கை 21 லட்சம் குறைந்துள்ளது.
உலக அளவில் செல்போன் வைத்திருப்போர் சீனாவில்தான் அதிகம். இந்தியாவுக்கு இதில் 2வது இடம்தான்.


Click it and Unblock the Notifications