பி.பி.எஃப், ஆர்.டி., தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி குறைப்பு: நிதி அமைச்சகம் அதிரடி

(What are the benefits of a loan against property)
பொது வருங்கால வைப்பு நிதி(பி.பி.எஃப்.), தேசிய சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தபால் நிலையங்களில் துவங்கப்படும் 5 ஆண்டு கால ரெக்கரிங் டெபாசிட்( ஆர்.டி.) ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
தற்போது பொது வருங்கால வைப்பு நிதிக்கு 8.8 சதவீத வட்டியும், 5 ஆண்டு கால தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 8.6 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.பி.எஃப். கணக்கிற்கு 8.7 சதவீத வட்டியும், 5 ஆண்டுகள் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 8.5 சதவீத வட்டியும் வழங்கப்படும். மேலும் 10 ஆண்டு கால தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி 8.9 சதவீதத்தில் இருந்து 8.8 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications