ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித் துறை அதிகாரி கைது
டெல்லி: ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வருமானவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
(5 banks that offer highest interest rate on NRE deposits)
டெல்லி காந்திநகரில் வருமானவரித்துறை கூடுதல் ஆணையராக இருப்பவர் சி.எஸ்.பாரதி. இவர் திருஷ்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, வருமான வரியை குறைத்து மதிப்பிடுவதற்காக ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டார். மேலும், இந்த பணத்தை இடைத்தரகர் ஒருவர் மூலமாக வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரியையும், இடைத்தரகரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications