டர்பன் மாநாட்டில் 'பிரிக்ஸ் வங்கி'யை உருவாக்குவது தொடர்பாக விவாதம்!

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'பிரிக்ஸ் வங்கி'யை உருவாக்க திட்டம்.. டர்பன் மாநாட்டில் விவாதம்
டர்பன்: தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்று வரும் ஐந்து நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் சார்பில் ஒரு வங்கியை உருவாக்க இணக்கம் காணப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறது..

பிரேசில்(B), ,ரசியா (R), இந்தியா(I), சீனா(C) மற்றும் தென்னாப்பிரிக்கா(S) ஆகிய ஐந்து நாடுகள் இணைந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு டர்பனில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங், ரசிய அதிபர் புதின், தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இம்மாநாட்டில் உலக வங்கி போன்ற இந்த ஐந்து நாடுகளும் தங்களது நாடுகளின் அபிவிருத்திக்காக ஒரு வங்கியை உருவாக்குவது தொடர்பாக விவாதித்துள்ளன.

 

குறிப்பாக இந்தியா சார்பில் இந்த வங்கிக்கு ஓகே செய்யப்பட்டிருக்கிறது. ஐந்து நாடுகளும் தலா 10 பில்லியன் டாலரை இந்த வங்கியில் வழங்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சீனாவோ ஒவ்வொரு நாடும் 100 பில்லியன் டாலரை கொடுக்க வேண்டும். மொத்தமாக கொடுக்க முடியாவிட்டாலும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. பிரேசில் நாடு ஒவ்வொரு நாடும் இயன்ற தொகையை கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் ரஷியாவோ எவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லவில்லை.

தற்போது முதல் கட்டமாக வங்கியை உருவாக்க இணக்கப்பாடு ஏற்பாட்டுள்ளதைத் தொடர்ந்து இதன் கட்டமைப்பு தொடர்பாக அடுத்த மாநாடுகளில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bank வங்கி
English summary

Brics nations discuss development bank | 'பிரிக்ஸ் வங்கி'யை உருவாக்க திட்டம்.. டர்பன் மாநாட்டில் விவாதம்

Leaders of the so-called Brics nations - Brazil, Russia, India, China and South Africa - are meeting in Durban to discuss the formation of a new development bank.
Story first published: Thursday, March 28, 2013, 8:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X