மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 8 சதவீதம் உயருமா?: இன்று மத்திய அமைச்சரவை முடிவு

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உயருமா?: இன்று தெரியும்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்துவது குறித்து இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது 72 சதவீத அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இந்த அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதாவது கூடுதலாக 8 சதவீதம் உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கவிருக்கிறது என்று தெரிகிறது.

 

இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் 1-1-2013 முதல் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அகவிலைப்படியை உயர்த்தி 72 சதவீதம் ஆக்கியது. இந்நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயரவிருக்கிறது. அகவிலைப்படி உயர்ந்தால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர்.

 

இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.கே.என்.குட்டி கூறுகையில்,

அகவிலைப்படி உயர்த்தப்படுவது நல்லது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். விரைவில் ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: hike
English summary

8% DA hike likely for central government employees | மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உயருமா?: இன்று தெரியும்

Union Cabinet is likely to approve on Tuesday a proposal to increase dearness allowance (DA) to 80 percent from existing 72 percent benefiting about 50 lakh employees and 30 lakh pensioners of the central government.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X