
கடந்த ஆண்டு 20 சதவீத அளவிலான அரசின் பாண்டுகளை வாங்கியுள்ளது எல்ஐசி. மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் 40 சதவீத பங்குகளையும் அது வாங்கியுள்ளது.
அதேசமயம், சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வதிலிருந்து எல்ஐசி கடந்த ஆண்டு பின்தங்கியது. அதாவது என்டிபிசி, ஆயில் இந்தியா, என்எம்டிசி உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டு வேறு முதலீட்டாளர்களை நாடும் நிலை ஏற்பட்டது. அதேசமயம், செயில், இந்துஸ்தான் காப்பர் ஆகியவற்றின் பெருமளவிலான பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது.
ஒரு நாளைக்கு எல்ஐசிக்கு கிடைக்கும் வருவாய் ரூ. 450 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை பாண்டுகளிலும், பங்குகளிலும் போட்டு வருகிறது எல்ஐசி.
அரசின் பங்குகளை தனி ஒரு நிறுவனமாக அதிக அளவில் வாங்கும் ஒரே நிறுவனமும் எல்ஐசிதான்.
கடந்த ஆண்டு செக்யூரிட்டிகள் மூலம் அரசு ரூ. 4.67 லட்சம் கோடி நிதியைத் திரட்டியது. இதில் எல்ஐசியின் பங்கு மட்டும் ரூ.1.10 லட்சம் கோடியாகும். அதாவது 21.4 சதவீதமாகும்.
நால்கோ நிறுவனத்தில் எல்ஐசி ரூ.236 கோடியை முதலீடு செய்துள்ளது. ஆர்சிஎப்பில் ரூ.142 கோடி, இந்துஸ்தான் காப்பரில் ரூ. 608 கோடி, என்டிபிசியில் ரூ. 923 கோடி, செயில் நிறுவனத்தில் ரூ. 1069 கோடி, என்எம்டிசியில் ரூ.282 கோடி நிதியை எல்ஐசி முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications