காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் பிடித்த 10 டன் கத்தாலை மீன்கள் ஒரு கோடி ரூபாக்கு ஏலம் போனது.
காரைக்கால் மாவட்டம் காசாகுடியைச் சேர்ந்த மீனவர்கள் செல்வமணி, கோவிந்தசாமி, கிளிஞ்சல் மேட்டைச் சேர்ந்த ஆனந்தராஜ், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த வாசுதேவராஜ் ஆகியோர், கடந்த 2ம்தேதி மீன் பிடிக்க சென்றுவிட்டு நேற்று கரை திரும்பினர். அவர்களுக்கு அரிய வகை மீன்களான கூறை கத்தாலை மீன்கள் 10 டன் கிடைத்தது.
ஒவ்வொரு மீன்களும் 2 அடி முதல் 3 அடிநீளம், 10 கிலோ முதல் 20 கிலோ எடையும் இருந்தது. ஒரு கிலோ ரூ 900 முதல் ரூ 1,200க்கு விலை போனது. மொத்தம் 10 டன் மீன்களையும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தார்.
இந்த கத்தாலை வகை மீன்கள், ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்தவையாகும். இந்த வகை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும். இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாகும்.
மேலும் இந்த நெட்டியானது ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒருவகை வேதிப்பொருட்களை கொண்டதாகவும் ஒயின் மற்றும் ஜெல்லி மிட்டாய்கள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக இதை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அதனால், மீனவர்கள் இதனை சேமித்து தங்கத்தை போல் கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இவ்வகை மீன்கள் ஆழ்கடலில் 4 அல்லது 6 நாட்கள் தங்கி மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தால் மட்டுமே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications