சென்செக்ஸில் 500 புள்ளிகள் சரிந்த பிறகும் வாங்கத் தகுந்த 5 பங்குகள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: அந்நிய நிதிகள் முன்னணி பங்குகளின் வர்த்தகத்தை பாதிக்கத் தொடங்கியிருப்பதால், பங்குச் சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. பலமான அஸ்திவாரமும், கட்டுப்படியாகக்கூடிய விலையும் கொண்ட 5 பங்குகள் பின்வருமாறு.

என்எம்டிசி

என்எம்டிசி தற்சமயம் நிஃப்டி பங்குத் தொகுப்பில் விப்ரோவின் செலவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடனற்றதாகவும், 19,000 கோடி ரூபாய் மேற்பட்ட நிதியை தன் கணக்கில் கொண்ட நிறுவனமாகவும் உள்ளது. இதன் பங்குகள் வியாழனன்று, 52 வார தாழ்ச்சியை எட்டியது. இந்நிறுவனம் தன் வளமான நிதியைக் கொண்டு, உலகம் முழுவதிலும் பல்வேறு சொத்துக்களை வாங்க தலைப்பட்டுள்ளமையால் இதன் பங்குகள் வாங்குவதற்கு உகந்தவையாக உள்ளன.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

பொதுத்துறை வங்கிகளுடைய உடைமைகளின் தரம் சர்ச்சைக்குரியதாக இருப்பினும், இவ்வங்கியின் பங்குகள் ஏட்டு மதிப்பில் வெறும் 0.41க்கு கிடைக்கக்கூடியவைகளாக உள்ளன. மிகச் சில பங்குகளே, கம்மியான விலையில் அதிக லாபம் தரும் விகிதத்தில் அமையப் பெற்றுள்ளன. நீங்கள் இப்போதுள்ள விலையான 59.55 ரூபாயில் பங்குகள் வாங்கினீர்கள் என்றால், உங்கள் வங்கி சென்ற வருட பங்காதாயத் தொகையையே இப்போதும் அறிவிக்கும் பட்சத்தில் உங்களுக்கு வரிவிலக்குடன் கூடிய பங்காதாயத் தொகை சுமார் 7 சதவீத அளவுக்கு வழங்கப்படும்.

கோல் இந்தியா

என்எம்டிசியைப் போலவே கோல் இந்தியாவும் வளமான நிதி நிலையுடன் நிலக்கரி சுரங்கத் தொழிலில் மறைமுக ஏகாதிபத்தியம் கொண்ட நிறுவனமாகும். அரசுடமை நிறுவனமான இது, சுரங்கத் தொழிலில் ஒழுங்கு நடவடிக்கையினால் உருவாகும் தடைகளை சந்திக்கும் வாய்ப்பின்றி செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் பங்கு அதன் 200 நாள் நகர்வு மதிப்பீட்டை விட 11 சதவீதம் குறைந்து காணப்படுவதால் இது நுகர்வோரை மிகவும் கவர்கிறது. அரசு, இந்நிறுவனத்திலுள்ள பங்குகளை விற்கப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், இப்பங்குகளின் விலை இன்னும் அதிகரிக்கும்.

ஐடியா செல்லுலார்

பல ஆய்வாளர்கள் தொலைதொடர்புத் துறையில் நிலவி வந்த தடுமாற்றம் முடிவுக்கு வந்து விட்டதாகவும், சில பெரிய கைகள்
இதனை தாக்குப்பிடித்து நிற்கும் என்றும் நினைப்பதால், ஐடியா செல்லுலாரின் பங்குகளை பரிந்துரை செய்கின்றனர். அது மட்டுமின்றி போட்டி குறைந்து வருவதால் விலை குறைப்புக்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கலாம். ஆனால், ஒழுங்கு நடவடிக்கைகளினால் உண்டாகக்கூடிய தடைகள் இருக்கும்.

ரிலையன்ஸ் குழுமம்

ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகள், கடந்த பல வருடங்களாக எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ஆனால் எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதனால் இந்நிறுவனங்களுடைய பங்குகளின் விலை ஏற்றமடையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 shares to buy after a 500 point crash on the Sensex | சென்செக்ஸில் 500 புள்ளிகள் சரிந்த பிறகும் வாங்கத் தகுந்த 5 பங்குகள்

Markets have come crashing down as foreign funds have started pressing sales in frontline stocks. Here are 5 stocks that have become affordable and are fundamentally sound. Take a look at why these stocks could fetch decent returns in the next 1-2 years.
Story first published: Tuesday, April 9, 2013, 9:57 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns