
(Why you must take a home loan insurance?)
இறப்பின்போது கிடைக்கும் பலன்கள்:
எல்.ஐ.சி. ஜீவன் அங்குர் பாலிசிதாரர் பாலிசி நடப்புக் காலத்தில் இறந்து போனால் நியமனதாரருக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதோடு வருவாய் ஆதாயமாக காப்பீடு செய்யப்பட்ட தொகையின் பத்து சதவீதம் சேர்த்து தரப்படுகிறது. ஒரு வேளை பாலிசிதாரர் உயிரோடு இருந்து குழந்தை இறந்து போனால் மற்றொரு குழந்தையை நியமனதாரராக்க பாலிசிதாரருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இறந்த குழந்தையின் பாலிசி மீதான அனைத்து பலன்களும் இதற்கும் பொருந்தும்.
முதிர்வின்போது கிடைக்கும் பலன்கள்:
பாலிசி காலத்தின் முடிவில் அடிப்படைக் காப்பீட்டுத் தொகைக்கு நிகரான உறுதியளிக்கப்பட்ட முதிர்வுத் தொகையுடன், விசுவாசத்திற்கான கூட்டுத் தொகை ஏதும் இருப்பின் அதுவும் சேர்த்துத் தரப்படும். இது காப்பீடு செய்யப்பட்டவர் உயிரோடு இருந்தாலும் பொருந்தும்.
விசுவாசத்திற்கான கூட்டுத் தொகை:
காப்பீட்டு நிறுவத்தின் அனுபவத்தைப் பொறுத்து முதிர்வு தேதியன்று பாலிசி, விசுவாசத்திற்கான கூட்டுத் தொகைக்கு தகுதியானதா என்பது தீர்மானிக்கப் படுகிறது. இது காப்பீடு செய்யப்பட்டவர் உயிரோடு இருந்தாலும் பொருந்தும்.
கூடுதல் விருப்ப பலன்கள்:
ஒருவர் கூடுதலாக பிரீமியம் செலுத்தி விருப்ப பலன்களுக்கான ரைடர்களைப் பெறலாம்.
விபத்துப் பலன்களுக்கான ரைடர்:
இந்தப் பலன்கள் வழக்கமான முறையில் பிரீமியம் செலுத்தும் பாலிசிகளுக்கு மட்டுமே கிடைக்கும் ஒன்று. உறுதியளிக்கப்பட்ட விபத்துப் பலன் ரைடர் தொகை பாலிசிதாரர் விபத்தின் காரணமாக இறந்தால் கூடுதலாக அளிக்கப்படும். உறுதியளிக்கப்பட்ட விபத்துப் பலன் ரைடர் தொகை அதிகபட்சம் அடிப்படைக் காப்பீட்டுத் தொகை வரை இருக்கலாம். இதற்கான குறைந்தபட்ச தொகை ரூ 25,000. அதிகபட்சம் ரூ. 50 லட்சம். இது எல்.ஐ.சி. மட்டுமல்லாது பிற காப்பீட்டு நிறுவனங்களிடம் எடுக்கப்பட்ட பாலிசி தொகைகளையும் சேர்த்துக் கணக்கிடப்படுகிறது. இந்த வசதியைப் பெற காப்பீடு செய்யப்படுபவரின் வயது எழுபதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சிக்கலான உடல் உபாதைகளுக்கான ரைடர்:
இந்த ரைடரின் கீழ் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை குறிப்பிடப்பட்ட உடல் உபாதைகளுக்கான சிகிச்சைக்காக அளிக்கப்படும். சிக்கலான உடல் உபாதைகளுக்கான ரைடர் தொகை அதிகபட்சம் அடிப்படைக் காப்பீட்டுத் தொகை வரை இருக்கலாம். இதற்கான குறைந்தபட்ச தொகை ரூ 50,000. அதிகபட்சம் ரூ. 5 லட்சம். இது எல்.ஐ.சி. நிறுவனத்தின் கீழ் எடுக்கப்பட்ட அனைத்து பாலிசி தொகைகளையும் சேர்த்துக் கணக்கிடப்படுகிறது. இந்த பலன்கள் பாலிசி முதிர்வடையும் வரை அல்லது பாலிசிதாரர் 60 வயதை அடையும் வரை கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications