
ஹெச்1 பி விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் குலுக்கல் முறையில் ஹெச்1 பி விசா வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதி துவங்கும் 2014ம் ஆண்டு நிதியாண்டில் அமெரிக்கா அதிகபட்சமாக 65,000 ஹெச்1 பி விசாக்கள் வழங்கலாம். இது தவிர அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு மேல் படித்த 20,000 பேருக்கு ஹெச்1 பி விசா வழங்கப்படும்.
ஒரு ஆண்டில் இத்தனை ஹெச்1 பி விசாக்கள் தான் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையிலேயே நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஏராளமானோர் ஹெச்1 பி விசா கேட்டு விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஹெச்1 பி விசா குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications