30 திஹார் சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம்

நேர்முகத்தேர்வுக்குப் பிறகு இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்களாம். தேர்வு திஹார் சிறையில் 3ம் எண்ணில் வைத்து நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
இது குறித்து சுனில் குப்தா என்ற ஜெயில் அதிகாரி கூறியதாவது, ‘ தேர்வு செய்யப்பட்ட 30 கைதிகளும் நன்னடத்தை உடையவர்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட இருப்பவர்கள். விடுதலைக்குப்பின் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என்றார்.
மேலும், 30 கம்பெனிகள் பங்கு கொண்ட நேர்முகத் தேர்வில், 15 கம்பெனிகள் மட்டுமே கைதிகளை பணிக்கு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்பட்ட கைதிகள் விற்பனைப்பிரதிநிதி, டேட்டா எண்ட்ரி மற்றும் வணிக பிரதிநிதிகளாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
திஹார் சிறையில் சுமார் 12000 கைதிகள் வெவ்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் அடைக்கப் பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications