சென்னை: நம் நாட்டுப் பங்குச் சந்தைகளில் அதிகளவில் முதலீடு செய்யும் மிகப் பெரிய நிறுவனங்களில் எல்.ஐ.சி நிறுவனமும் ஒன்று. நடப்பு நிதியாண்டின் கால் இறுதியில் (2013), குறிப்பிட்ட நிறுவனங்களில் உள்ள தம் பங்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினாலும் எல் ஐ சி, அப்பங்குகளை குறைத்துக் கொண்டது.
அப்படி எல்.ஐ.சி நிறுவனம் தவிர்த்த பங்குகள் எவை? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் 2013ம் நிதியாண்டின் மூன்றாம் காலிறுதியில் மிகவும் சிறப்பான, பிரம்மிக்கத்தக்க வகையில் செயல்பட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை கவர்ந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 3,000 த்தைத் தாண்டியது. இருப்பினும் இதே காலகட்டத்தில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள இன்போசிஸ் பங்குகளை விற்றுள்ளது எல்.ஐ.சி நிறுவனம்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
வங்கிப் பங்குகளில் பலருக்கு பிடித்தமான ஹெச்.டி.எஃப்.சி பங்குகள், கோப்ராபோஸ்ட் வெளியிட்ட பண மோசடி தொடர்பான புகார்கள் முதலீட்டாளர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் தம்மிடம் உள்ள ஹெச்.டி.எஃப்.சி பங்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக, சுமார் 40 லட்சம் பங்குகளை விற்றுள்ளது எல்.ஐ.சி நிறுவனம்.
ஹிந்துஸ்தான் யூனிலிவர்
மார்ச் 31ல் முடிந்த காலிறுதியில் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனப் பங்கின் விலை சரியத் தொடங்கியது. மேலும், ஹிந்துஸ்தான் யூனிலிவரின், மூல நிறுவனத்துக்கு கொடுக்கும் ராயல்டி தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, சுமார் 1 கோடியே 30 லட்சம் பங்குகளை விற்றுள்ளது எல்.ஐ.சி. நிறுவனம்.
பேங்க் ஆப் பரோடா
வங்கிகள் தமக்கு வருமானம் தராத பல சொத்துக்களை வைத்திருக்கின்றன என்பது இப்போது பலரும் முன்வைக்கும் ஒரு விவாதம். இந்த நிலையில், தம்மிடம் உள்ள ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பேங்க் ஆப் பரோடா பங்குகளை விற்றிருக்கிறது எல்.ஐ.சி. நிறுவனம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications