
(Spot gold prices dip in major metros)
1. 2013ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் இன்போசிஸ் 1987 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் என்று நிபுணர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்போசிஸ் இந்த காலாண்டில் 1938 மில்லியன் அமெரிக்க டாலர்களே ஈட்டியிருக்கிறது.
2. இன்போசிஸ் நிறுவனத்தின் இபிஐடி மார்ஜின் மிகவும் குறைவாக இருக்கிறது. அதாவது சந்தையில் எதிர்பார்ப்பு 25 சதவீத இபிஐடி மார்ஜினாக இருக்கிறது. ஆனால் இன்போசிஸ் 23.55 இபிஐடி மார்ஜினையே பெற்றுள்ளது.
3. நிறுவனங்களை ஆய்வு செய்யும் நாஸ்காம் அமைப்பு நிறுவனங்களின் வருமான வளர்ச்சி 2014ம் நிதியாண்டில் 12-14 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தது. ஆனால் இன்போசிஸ் 6-10 சதவீத வருமான வளர்ச்சியையே வைத்திருக்கிறது.
4. எதிர்பாத்ததைவிட அதிகமாக, இன்போசிஸ் மொத்த லாபமாக ரூ.2394 கோடி பெற்றுள்ளது. ஆனால் இந்த வருமானம் இதர மூலங்கள் மூலம் வந்ததாகும்.
5. 2014ம் ஆண்டுக்கான இபிஎஸ் கைடன்சை இன்னும் இன்போசிஸ் வெளியிடவில்லை. ஏற்கனவே அந்த நிறுவனத்தின் வருமானம் நிலையில்லாமல் இருக்கும் நிலையில் இதுவேறு கவலையை அதிகரிக்க வைத்துள்ளது.
6. இறுதியாக இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அதாவது 18 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.


Click it and Unblock the Notifications