
இந்த நிதி அறிக்கை குறித்து விப்ரோவின் சேர்மன் ஆசிம் பிரேம்ஜி கூறுகையில்,
விப்ரோவை ஒரு முழு ஐடி நிறுவனமாக மாற்றுவதற்காக, நாங்கள் டிமெர்ஜர் ஆப் த டைவர்சிபைட் பிசினஸை மார்ச் 31, 2013ல் நிறைவு செய்திருக்கிறோம் என்றார்.
மேலும் விப்ரோவின் எக்சகியூட்டிவ் இயக்குனர் மற்றம் தலைமை பொருளாதார அலுவலர் சுரேஷ் சேனாபதி கூறுகையில்,
நாங்கள் முழுமையான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி அதன் மூலம் விப்ரோ ஒரு புதிய படைப்பை உலகிற்கு அளிக்கும். அதன் மூலம் விப்ரோ இன்னும் பல மடங்கு வளரும். அதோடு கடந்த காலாண்டில் ஏற்பட்ட அயல்நாட்டு பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் எங்களுடைய பொருளாதார செயல்பாட்டைப் பாதித்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.
விப்ரோவின் ஐடி வர்த்தக பிரிவின் சிஇஒ டி கே குரியன் கூறுகையில், வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவதிலும், வேலை வாய்ப்பு வழங்குவதிலும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறோம். மேலும் எதிர்கால மார்க்கெட் ஆர்கனைசேஷன் பொசிஷன்களுக்காக நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்றார்.
ஐடி வர்த்தகம் மூலம் 2014 முதல் காலாண்டில் 1,575 முதல் 1,610 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற வேண்டும் என்று விப்ரோ எதிர்பார்க்கிறது. விப்ரோவின் ஐடி பிரிவில் 2013, மார்ச் 31 வரை 1,45,812 பணியாளர்கள் இருந்தனர். தற்போது மேலும் 2,907 பணியாளர்கள் விப்ரோவின் ஐடி துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கின்றனர். அதோடு இந்த புதிய காலாண்டில் 52 புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றிருக்கின்றனர்.
இதுவரை விப்ரோ, ஐரோப்பாவைச் சேர்ந்த யுனிவர்சல் வங்கியின் ஒப்பந்தத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் விப்ரோ ஒரு சென்ட்ரலைஸ்டு டெஸ்டிங் யூனிட்டை உருவாக்கவிருக்கிறது. இந்த யுனிட்டைப் பயன்படுத்தி, அந்த வங்கியானது குறைந்த செலவில் அதிக லாபத்தைப் பெற முடியும்.
மேலும் விப்ரோவின் ட்ரான்ஸ்பர்மேஷன் சர்வீசஸ், டேட்டா அப்பியூஸ்கேஷன் சர்வீசஸ் மற்றும் டெஸ்டிங் சர்வீசஸ் போன்றவை மூலம் அந்த வங்கி ஒரு ஸ்டாண்டர்டைஸ்டு டெஸ்டிங் ப்ராசஸைப் பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications